நமஸ்காரம்,
ஐந்து கிரஹங்கள் ஒரே ராசியில் சேர்வது – முக்யமாக குருவும் சுக்ரனும் மகர ராசியில் சேர்வது லோக
க்ஷேமத்திற்கு கெடுதல் விளைவிக்கலாம் என்று சொல்லப் படுகிறது. ஸ்ரீ பெரியவள் அவர்கள் ஸ்ரீ மடத்தின்
எல்லாக் கிளைகளிலும் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்வது உத்தமம் என்று கூறுகிறார்கள்.
1. இந்த 25 நாட்களிலும் அதாவது 27.01.21 முதல் 20.02.21 வரை தினப்படி குறைந்த பக்ஷம் 108 ஆவர்த்தி நவக்கிரஹ
ஹோமம் (ஒவ்வொரு க்ரஹத்திற்கும்) செய்ய வேண்டும், சௌகரியப்பட்டால் அதிக பிக்ஷமாக 336 அவ்ர்த்திகள்
செய்யலாம்.
2. ஜபம் : சூரியன் (முதல் ரிக்) 7000 ஆவர்த்தி
சந்திரன் ” 11000 ஆவர்த்தி
செவ்வாய் ” 18000 ஆவர்த்தி
புதன் ” 9000 ஆவர்த்தி
குரு ” 11000 ஆவர்த்தி
சுக்ரன் ” 16000 ஆவர்த்தி
சனி ” 23000 ஆவர்த்தி
ராகு ” 18000 ஆவர்த்தி
கேது ” 17000 ஆவர்த்தி
மேற்கூறிய ஆவர்த்திகள் இந்த 25 நாட்களில் முடிக்க வேண்டும்.
3. அதி தேவதா, பிரத்யதிதேவதா ஜபம் கடைசியில் ஒரு முறை செய்யவேண்டும்.
மேற்கூறிய பரிகாரங்கள் லோக க்ஷேமத்திற்காக செய்யப்படுகிறது என்று சங்கல்பம்.